சிரஞ்சீவியின் தம்பி மகளை கரம்பிடிக்க உள்ள பிரபாஸ்

       பதிவு : Apr 10, 2018 10:12 IST    
பாகுபலி பிரபாஸின் திருமணம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது நடிகை நிஹாரிகாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பாகுபலி பிரபாஸின் திருமணம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது நடிகை நிஹாரிகாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

பிரபல தெலுங்கு நடிகரான பிரபாஸ் கடந்த 2002-ஆம் ஆண்டிலிருந்து திரையுலகில் தற்போது வரை 16 வருடங்களாக நடித்து வருகிறார். கடந்த 16 வருடங்களில் பிரபாஸ் நடிப்பில் 18 படங்கள் வெளிவந்துள்ளது. இதில் டார்லிங், மிர்ச்சி, பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்கள் சிறந்த நடிகருக்கான புகழை தேடி தந்தது.  இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான பாகுபலி படம் முன்னணி நடிகருக்கான அடையாளத்தை தேடி தந்தது.

இந்த படத்தின் மூலம் அவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். பாகுபலி படத்தில் நடிகை அனுஷ்காவுடன் இணைந்து நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் கடுப்பாகி இதை பற்றி பேச வேண்டாம் என மறுக்க இருவரின் காதல் குறித்த செய்திகள் குறைந்தது.

 

தற்போது இருவரும் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிரபாஸுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக மீண்டும் தகவல் வெளிவர தொடங்கியுள்ளது. தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகளான நடிகை நிகாரிகா கோணிடிலா என்பவரை விரைவில் கரம் பிடிக்க உள்ளார்.

நடிகை நிஹாரிகா, தமிழில் விஜய் சேதுபதியுடன் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்திலும், இரண்டு வெப் சீரிஸ் மற்றும் 'ஒக்க மனசு (Oka Manasu)' என்ற படத்திலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் இயக்குனர் லக்ஷ்மன் கார்ய இயக்கத்தில் உருவாகிவரும் 'ஹாப்பி வெட்டிங் (Happy Wedding)' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வளர்ந்து வரும் நிஹாரிகாவுக்கு 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் பிரபாஸை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். இது குறித்து சிரஞ்சீவி குடும்பத்தினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை சிரஞ்சீவி தரப்பில் மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


சிரஞ்சீவியின் தம்பி மகளை கரம்பிடிக்க உள்ள பிரபாஸ்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்