×

Entertainment

Technology

ads

பிரபாஸின் சாஹோ படத்தில் இணையும் அஜித், விஜய் வில்லன்கள்

sahoo movie villain
sahoo movie villain

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் தற்பொழுது நடித்து வரும் அதிரடி த்ரில்லர் படம் 'சாஹோ'. இந்த படத்தினை இயக்குனர் சுஜித் இயக்கிவருகிறார். ஹிந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபாஸ் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த இப்பட்டத்தின் போஸ்டர், டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவவேற்பினை பெற்றிருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியிட உள்ள இப்படத்தில் அஜித், விஜய் படத்தின் வில்லன்கள் களமிறங்கியுள்ளனர்.

 ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'கத்தி'. இந்த படத்தில் வில்லனாக இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் நடித்திருந்தார். மேலும் தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த படம் 'விவேகம்'. இந்த படத்தில் விவேக் ஓபராய் என்ற இந்தி நடிகர் நடித்திருந்தார். தற்பொழுது இந்த இரு இந்தி நடிகர்களும் பிரபாஸின் 'சாஹோ' படத்தில் நடிக்கவுள்ளனர். 

ads

நடிகர் நீல் நிதின் முகேஷ் 'சாஹோ' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில்  நடிப்பது நமக்கு முன்பே அறிந்த தகவல். இந்நிலையில் அஜித் பட வில்லன் விவேக் ஓபராய் இப்படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இவர்களை தவிர ஷ்ரத்தா கபூர், மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப் உட்பட பல பாலிவுட் நடிகர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.   

பிரபாஸின் சாஹோ படத்தில் இணையும் அஜித், விஜய் வில்லன்கள்

ads

ads