ads

அல்லு அர்ஜுன் படத்தின் மூலம் மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்துள்ள சரத்குமார்

நடிகர் சரத்குமார் அல்லு அர்ஜுன் படத்தின் மூலம் மீண்டும் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார்.

நடிகர் சரத்குமார் அல்லு அர்ஜுன் படத்தின் மூலம் மீண்டும் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார்.

நடிகர், அரசியல்வாதி மற்றும் பத்திரிகையாளரான சரத்குமார் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் தற்போது வரை 144 படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராக தயாரிப்பாளராக மற்றும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். திரைத்துறையில் 1986இல் அறிமுகமான இவர் 1990இல் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'புலன்விசாரணை' படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் இவருக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் வில்லனாக கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கு பிறகு நடிக்க உள்ளார். இவருடைய நடிப்பில் இறுதியாக சண்டமாருதம், சென்னையில் ஒரு நாள் 2 போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்களுக்கு பிறகு இவர் நா பேரு சூர்யா, பாரத் அனே நேனு, சாக்ஷ்யம், அடங்காதே, பாம்பன், ரெண்டாவது ஆட்டம், நல்லாசிரியர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா' என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். புலன் விசாரணைக்கு பிறகு சரத்குமார் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். சரத்குமார் இரு வேடத்தில் நடித்த 'சண்டமாருதம்' படம் போதிய வரவேற்பினை பெறாவிட்டாலும் இந்த படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அல்லு அர்ஜுன் படத்தின் மூலம் மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்துள்ள சரத்குமார்