றெக்க இயக்குனருடன் இணைந்த நடிகர் சிம்பு

       பதிவு : Mar 27, 2018 10:39 IST    
றெக்க படத்தை இயக்கிய இரத்தின சிவாவுடன் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார். றெக்க படத்தை இயக்கிய இரத்தின சிவாவுடன் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார்.

நடிகர் சிம்பு தற்போது 'அன்பானவன் அசாராதவன் அடங்காதவன்' படத்திற்கு பிறகு இயக்குனர் மணி ரத்னம் இயக்கி வரும் 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார். திரை துறையில் பல பிரச்சனைகளை தனியாக நின்று சமாளிக்கும் சிம்புவுக்கு இந்த படம் திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்க படுகிறது.

ஆனால் எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய சிம்புவை இந்த படத்தில் நடிக்க விடாமல் தயாரிப்பாளர்கள் தொந்தரவு செய்வதாக சமீபத்தில் செய்திகள் வந்தது. இது போன்ற பல தடைகளை மீறி இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்க உள்ள புதுப்பட குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் அடுத்த படத்தை இயக்குனர் இரத்தின சிவா இயக்க உள்ளார்.

 

இதற்கான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குனர் இரத்தின சிவா முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான அதிரடி படமான 'றெக்க' படத்தை இயக்கி உள்ளார். புதியதாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் மூலம் உருவாகவுள்ள இந்த படமும் றெக்க படத்தை போன்று அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது. 


றெக்க இயக்குனருடன் இணைந்த நடிகர் சிம்பு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்