சிவகார்த்திகேயனின் புது பட டைட்டில்

       பதிவு : Dec 09, 2017 20:51 IST    
sivakarthikeyan new movie title sivakarthikeyan new movie title

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள 'வேலைக்காரன்' படத்தினை தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கு முன்னதாகவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ள இயக்குனர் பொன்ராம் மூன்றாவது முறையாக சிவாவுடன் இணைவது குறிப்பிட்ட தக்கது.

தற்பொழுது சிவகார்த்திகேயன் முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்து வருகிறார். வேலைக்காரன் படத்தில் நயன்தாராயுடன் ஜோடி சேர்த்த சிவா இந்த புது படத்தில் சமந்தாவுடன் இணையவுள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், சூரி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் பாலா சுப்பிரமணியம் ஒளிப்பதிவில் ஈடுபட்டு வருகிறார். 

 

இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் தற்பொழுது தென்காசி பகுதியில் நடைபெறுவதாகவும், 50% படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் படக்குழு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தற்பொழுது வந்த தகவலில் படத்தின் தலைப்பினை 'சீம ராஜா' என்று வைப்பதாக படக்குழு முடிவு செய்துள்ளததாக தெரிகிறது. ஆனால் தலைப்பினை குறித்து படக்குழு எந்த வித தகவலையும் வெளிப்படுத்த வில்லை. விரைவில் டைட்டில் பற்றிய செய்தி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.      
 


சிவகார்த்திகேயனின் புது பட டைட்டில்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்