ads

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகாத்திகேயனின் புது படம்

sivakarthikeyan vignesh shivan new project updates

sivakarthikeyan vignesh shivan new project updates

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது அவர் நடிப்பில் வெளிவந்த 'வேலைக்காரன்' படத்திலும் இந்த ஹிட் தொடர்ந்தது. இந்த படத்தினை மோகன் ராஜா அதிரடியாக உருவாக்கி இருந்தார். மேலும் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பினை பெற்றிருந்தார். இவர்களது கூட்டணி முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்திருந்தது குறிப்பிட தக்கது. இவர்களுடன் சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு, விஜய் வசந்த், சதீஷ் என பல திரையுலக வட்டாரங்கள் இணைந்திருந்தனர். மேலும் இப்படத்தில் அனிருத் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக வரவேற்கப்பட்டனர்.      

இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தற்பொழுது நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இக்கூட்டணியில்  சமந்தா நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  

இந்த படத்திற்கு அடுத்த படியாக சிவகார்த்திகேயன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தினை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்கில் வெளியிட்டனர். தற்பொழுது இந்த படம் திரையரங்கில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவனின் அடுத்த படம் சிவாவை வைத்து இயக்கவிருப்பதாக நம்பத்தக்க வட்டாரங்கள் தகவலை வெளியிட்டுள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் இதற்கு முன்னதாகவே ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படத்தினை செய்து தருவதாக ஒப்பந்தமாகி இருந்ததால், சிவாவின் இந்த புது படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்தில் இசையமைக்கும் பணியில் அனிருத் இணைந்துள்ளார். இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகாத்திகேயனின் புது படம்