ads

சொந்த பந்தங்களுடன் ஊர் திருவிழாவில் நடிகர் சூரி ஆடிய ஒயிலாட்டம்

நடிகர் சூரி தன்னுடைய ஊர் திருவிழாவில் ஆடிய ஒயிலாட்டம் நடன வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நடிகர் சூரி தன்னுடைய ஊர் திருவிழாவில் ஆடிய ஒயிலாட்டம் நடன வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் பரோட்டா சூரியின் காமெடிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. எந்த நாயகர்களுடன் கைகோர்த்தாலும் தன்னுடைய கிராமத்து பாஷையில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவார். 1999ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு 2009இல் வெளியான வெண்ணிலா கபடி குழு திருப்பு முனையாக இருந்தது.

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிய துவங்கியது. இதன் பிறகு விக்ரம், விஜய், சிவகார்த்திகேயன், விமல், விஷ்ணு விஷால், சசிகுமார், விஷால் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் கை கோர்த்துவிட்டார். தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகியுள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. விவசாயம், குடும்பம் இவற்றின் அருமையை உணர்த்தும் விதமாக வெளியாகியுள்ள இந்த படம் மூன்றாவது வாரத்தை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக இவருடைய சீம ராஜா, சாமி ஸ்கொயர் போன்ற படங்கள் வெளியாக உள்ளது. இந்நிலையில் தன்னுடைய சொந்த பந்தங்களுடன் இணைந்து அவருடைய சொந்த ஊரில் நடைபெற்று வரும் ராஜாக்கூரில் காளியம்மன் கோவில் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய வீடியோ ஒன்றை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

சொந்த பந்தங்களுடன் ஊர் திருவிழாவில் நடிகர் சூரி ஆடிய ஒயிலாட்டம்