ads

தொடரும் கார் மோசடி அடுத்து சிக்கிய நடிகர் சுரேஷ் கோபி

தொடரும் கார் மோசடி அடுத்து சிக்கிய நடிகர் சுரேஷ் கோபி

தொடரும் கார் மோசடி அடுத்து சிக்கிய நடிகர் சுரேஷ் கோபி

கேரளாவில் கார் மோசடி வழக்கில் நாளுக்கு நாள் ஒவ்வொருவராக சிக்கிக்கொண்டிருக்கின்றனர்.  முதலில் அமலா பால் அவரை அடுத்து நஸ்ரியா கணவர் பகத் பாசில். இவர்களை அடுத்து தற்போது நடிகர் சுரேஷ் கோபி மாட்டியுள்ளார். இவர் மலையாளத்தில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த தீனா படம் மக்களிடையே பிரபலமானது. இவர் நடிகர், பின்னணி பாடகர், பா.ஜ.க எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 2010-ஆம் ஆண்டு 80 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் வாங்கி புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்துள்ளார். கேரளாவில் வரி அதிகம் என்பதால் புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்வது வழக்கமாகிவிட்டது. கேரளாவில் இயங்கும் சொகுசு காருக்கு விலையின் 20% வரியை செலுத்தவேண்டும். அது கிட்டத்தட்ட 16 லட்சம் என்பதால் புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்துள்ளார். 2013 -ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ரிஷிராவ் சிங் வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்படும் கார்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இந்த விசாரணையில் சுமார் 2000 கார்களுக்கு மேல் சிக்கியது. இதில் சொகுசு கார்களின் 50 உரிமையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மாநில அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இதனை அடுத்து ரிஷிராவ் சிங் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்ட பின் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இதனால் தற்போது கார் மோசடி வழக்கு தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அடுத்த பிரபலம் யாரென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

தொடரும் கார் மோசடி அடுத்து சிக்கிய நடிகர் சுரேஷ் கோபி