ads

அனுஷ்காவின் பாகமதி இசையை வெளியிட்ட சூர்யா

anushkas bhaagamathie audio launch

anushkas bhaagamathie audio launch

அருந்ததி, ருத்ரம்மாதேவி, பாகுபலி 1&2 போன்ற சரித்திர படங்களில் நடித்த நடிகை அனுஷ்கா தற்போது 'பாகமதி ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சரித்திர படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் வழக்கமான கமர்சியல் என்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும் என்று இயக்குனர் ஜி.அசோக் தெரிவித்துள்ளார். யுவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் சார்பில் வம்சி கிருஷ்ண ரெட்டி பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்தில்  எஸ்.தாமன் இசையமைக்கிறார். இவருடன் இணைந்து ஆர்.மதி ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு விறுவிறுப்பாக இறங்கியுள்ளது.    

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்திலும் 'பாகுபலி' படத்தினை போன்று அதிகளவு கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறதாம். இந்த படத்தில் ஆதி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அனுஷ்காவின் பிறந்த நாளான நவம்பர் 7-இல் படக்குழு வெளியிட்டது. இதனை தொடர்ந்து வெளிவந்த 'பாகமதி ' படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர் போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது. இந்நிலையில் படத்தின் இசையை நேற்று சென்னையில் உள்ள வடபழனி நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமான முறையில் நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த இசையில் இடம் பெற்ற ‘மந்தாரா' பாடல் ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பினை பெற்று வருகிறது.   

அனுஷ்காவின் பாகமதி இசையை வெளியிட்ட சூர்யா