ads

கெளரவ வேடத்தில் விஜய் ஆண்டனி

கெளரவ வேடத்தில் விஜய் ஆண்டனி

கெளரவ வேடத்தில் விஜய் ஆண்டனி

ட்ராபிக் ராமசாமி என்பவர் புகழ் பெற்ற சமூக ஆர்வலர். இவர் பொதுநல சேவை, போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டால் உடனே களமிறங்குவது போன்ற சமூக சேவைகளில் தாமாக முன்வந்து தனது பணியை செய்வார். மேலும் இவர் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு பொதுநல வழக்குகளை தொடர்ந்து நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். இந்த வழக்குகளில் வழக்கறிஞர் இன்றி தானே வாதிடுவது என்ற நடைமுறையை கையாள்கிறார்.

சமூக ஆர்வலர்களின் முன்னோடி என்று அழைக்கப்படும் ட்ராபிக் ராமசாமியின் வாழ்க்கையை தழுவி தற்போது ஒரு படம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு 'ட்ராபிக் ராமசாமி' என்று அவரது பெயரையே வைத்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஜய் விக்ரம் இயக்குகிறார். 

ஈரோடு மோகன் தயாரிக்கும் இந்த படத்திற்கு பால முரளி பாலு இசையமைக்கிறார். இந்த படத்தில் அம்பிகா, லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் 'ட்ராபிக் ராமசாமியாக' இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவருக்கு மனைவியாக ரோகினி நடிக்கிறார். இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் முக்கிய வேடத்தில்  நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக உபாஷணா நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் அநியாயங்களை தட்டி கேட்கும் ஒரு துடிப்புள்ள இளைஞனாக அவர் நடிக்கிறார் என தகவல் வந்துள்ளது. விஜய் ஆண்டனி, எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த 'சுக்ரன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெளரவ வேடத்தில் விஜய் ஆண்டனி

கெளரவ வேடத்தில் விஜய் ஆண்டனி