ads

அண்ணாதுரை இசை வெளியீடு

அண்ணாதுரை இசை வெளியீடு

அண்ணாதுரை இசை வெளியீடு

ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த அண்ணாதுரை படத்தினை ராதிகா சரத்குமார் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம் கார்பரேஷனும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் பஸ்ட் லுக், ட்ரைலர் போன்றவை ரசிகர்களின் வரவேற்பு அதிகளவு பெற்று படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பிச்சைக்காரன் படத்தினை போன்று தெலுங்கில் 'இந்திரசேனா' என்ற தலைப்பில் அண்ணாதுரை படத்தினை வெளியிட உள்ளனர். இப்படத்தின் பஸ்ட் லுக் தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர் சிரஞ்சீவி தலைமையில் வெளியிட்டதால் தெலுங்கிலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.  மேலும் பிச்சைக்காரன் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் ரசிகர்கள் வட்டாரத்தை விஜய் ஆண்டனி பிடித்துள்ளார்.  

இந்நிலையில் வருகிற நவம்பர் 15ம் தேதி படத்தின் இசை வெளியீடு இருப்பதாக படக்குழுவினர் செய்தியை வெளியிட்டுள்ளனர். ட்ரைலரே மெகா ஹிட் அடிக்கும் அளவிற்கு இருந்தது, படத்தில் நாயகனாக நடிக்கும் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இனி சொல்லவா வேணும் பாடலும் மாஸ் அடிக்கும் அளவிற்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

அண்ணாதுரை இசை வெளியீடு