ads

செய் படத்தின் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி

Actor Vijay Sethupathi to be released Actor Nakul new movie sei trailer today at 6PM

Actor Vijay Sethupathi to be released Actor Nakul new movie sei trailer today at 6PM

நடிகை தேவயானி தம்பியான நகுல் நடிப்பில் இறுதியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 'பிரம்மா.காம்' படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிஎஸ் விஜயகுமார் இயக்க நகுலுக்கு ஜோடியாக நடிகை அஸ்னா சவேரி நடித்திருந்தார்.

இந்த படத்தில் கடவுளிடம் அதை வேண்டும், இதை வேண்டும் என வேண்டாமல் கடவுள் கொடுத்த வாழ்க்கையை முறையாக வாழ்ந்தால் உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையும் என்றதொரு கருத்தை மக்களிடம் பதிவு செய்திருந்தனர். இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

இதனை தொடர்ந்து நடிகர் நகுல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் 'செய்'. மலையாள இயக்குனர் ராஜ் பாபு இயக்கி வருகிறார். இந்த படத்தில் நகுலுக்கு ஜோடியாக இந்தி நடிகை ஆஞ்சல் முஞ்சல் என்பவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக நகுல் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த படத்தை ட்ரிப்பி டர்ட்டூல்ஸ் ப்ரொடக்ஷ்ன் நிறுவனம் சார்பில் மண்ணு மற்றும் உமேஷ் தயாரித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், நாசர், அஞ்சலி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

செய் படத்தின் ட்ரைலரை வெளியிடும் விஜய் சேதுபதி