கேன்ஸ் திரைப்பட விழாவில் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்

       பதிவு : Feb 09, 2018 16:30 IST    
vijay sethupathi super deluxe to premiere at cannes vijay sethupathi super deluxe to premiere at cannes

கடந்த ஆண்டு இயக்குனர் பன்னீர் செல்வன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'கருப்பன்' பட வெற்றியை தொடர்ந்து தற்பொழுது விஜய் சேதுபதி பல படங்களில் வித்தியாசமான தோற்றத்தை கையாண்டு நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், 96, இமைக்கா நொடிகள், இடம் பொருள் ஏவல், சை-ரா, ஜூங்கா போன்ற படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் சில படங்களில் போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. தற்பொழுது இவரது நடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் இதுவரை மேற்கொள்ளாத திருநங்கை கெட்டப்பை கையாண்டு வருகிறார். இந்த கெட்டப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் வலைத்தளத்தில் இன்றளவும் பரவி வருகிறது.     

இந்த படத்தினை 'ஆரண்ய காண்டம்'  புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வருவதோடு அவருக்கு சொந்தமான ‘Tyler Durden And Kino Fist’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தையும் அவரே தயாரித்து வருகிறார். 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி ஷில்பா என்ற கேரக்டரில் திருநங்கையாக வளம் வரும் இப்படத்தில் சமந்தா வேம்பு என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து ஃபகத் ஃபாஸில், ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் 'குயின் ஆஃப் டப்ஸ்மாஷ்’ மிருணாளினி ரவி சில காட்சிகளில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் பி.எஸ்.வினோத் – நிரவ்ஷா ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளனர்.   

 

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தினை வருகிற ஏப்ரல் மாதம் 27ம் தேதி திரையிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் 2018ம் ஆண்டிற்காக நடைபெற உள்ள 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் இந்த படத்தினை திரையிட இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் மிஸ்கின் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.   


கேன்ஸ் திரைப்பட விழாவில் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்