இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் காவல் துறை அதிகாரிகளாக விமல் வைகை புயல்

       பதிவு : Apr 28, 2018 16:26 IST    
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் வடிவேலு ஆகியோர் காவல் துறை அதிகாரிகளாக நடிக்க உள்ளனர். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் வடிவேலு ஆகியோர் காவல் துறை அதிகாரிகளாக நடிக்க உள்ளனர்.

 இயக்குனர் மற்றும் எழுத்தாளரான சுராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் 'கத்தி சண்டை'. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யா விட்டாலும், வைகை புயலின் காமெடிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் வைகை புயல் வடிவேலுக்கு ரீ-என்ட்ரி படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து வைகை புயல் மீண்டும் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் சுராஜ், மூவேந்தர், குங்கும போட்டு கவுண்டர், மிலிட்டரி, தலை நகரம், மருதமலை, படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற வெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு அளித்தவர்.

இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த அலெக்ஸ் பாண்டியன், சகலகலா வல்லவன், கத்தி சண்டை போன்ற  படங்கள் ரசிகர்களிடம் போதிய வரவேற்பினை பெற வில்லை. இந்த படங்களுக்கு பிறகு மீண்டும் நடிகர் விமலை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார். நடிகர் விமல் தற்போது கன்னி ராசி மற்றும் களவாணி 2 போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனை முடித்த பிறகு இயக்குனர் சுராஜுடன் இணைய உள்ளார்.

 

மேலும் இந்த படத்தில் விமல் மற்றும் வைகை புயல் இருவரும் காவல் அதிகாரிகளாக நடிக்க உள்ளனர். சுராஜ் இயக்கத்தில் அர்ஜுன், வடிவேலு காவல் துறை அதிகாரிகளாக நடித்த 'மருதமலை' படத்திற்கும் வைகை புயலின் காமெடிக்கும் தற்போதுவரை ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கிறது. இந்த படத்தை போன்று மீண்டும் காவல் துறை அதிகாரிகள் கதாபாத்திரத்தை வைத்து கலகலப்புடன் புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார் சுராஜ்.


இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் காவல் துறை அதிகாரிகளாக விமல் வைகை புயல்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்