உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்படும் விஷால்

       பதிவு : Feb 19, 2018 10:53 IST    
vishal admitted in delhi hospital vishal admitted in delhi hospital

நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இரும்புத்திரை’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இதனை தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சண்டக்கோழி 2’ படத்திலும் விஷால் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இறுதி கட்ட பணிகளில் படக்குழு தற்போது தீவிரமாக உள்ளது. இந்த படத்தில்  விஷாலுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வந்த 'சண்டக்கோழி 2' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விஷால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்படும் விஷால்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்