ads

மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர் விஷால்

vishal support fishermen protest

vishal support fishermen protest

தற்பொழுது தமிழ் நாட்டில் உள்ள கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களை உலுக்கி கொண்டிருக்கும் ஒக்கி புயல் காரணத்தினால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் ஒக்கி புயலால் கடலில் சிக்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது. இவர்களை கடலில் இருந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மீனவ குடும்பத்தினர், உறவினர் அனைவரும் வருத்தத்தில் இருப்பதோடு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்த அவல நிலைக்கு உதவி செய்யுமாறு திரையுலகில் இருந்து முதல் முதலாக நடிகர் மற்றும் இசை இயக்குனருமான ஜிவி பிரகாஷ் குரல் கொடுத்திருந்தார். இவரை தொடர்ந்து தற்பொழுது விஷாலும் குரல் கொடுக்கும் வகையில் அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 

அதில் 'இப்பொழுது மிக பெரிய அளவில் பிரச்சனை நடந்து வருவது என்றால் கன்னியாகுமரி மீனவர்களின் பிரச்சனை தான். இந்த பிரச்சனைக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும். இந்த பிரச்சனைக்கு மாநில அரசு முன்வந்து அதிகளவு முன்னுரிமை கொடுத்து தொலைந்து போன மீனவர்களின் எண்ணிக்கையை கொண்டு அனைவரையும் மீட்க வேண்டும்' என்று பதிவு செய்துள்ளார்.   

மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர் விஷால்