விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் தெலுங்கு பிரபல மகள்

       பதிவு : Feb 05, 2018 16:06 IST    
vishnu vishal to romance a telugu star daughter vishnu vishal to romance a telugu star daughter

'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் திரையுலகில் விஷ்ணு விஷால் நாயகனாக  அறிமுகனார்.  அதன் பின்னர் பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர் பறவை, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான Edison விருதினை பெற்றதோடு 'நீர்பறவை' படத்திற்கு சிறந்த நடிகருக்கான சீமா விருது பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

இந்த வெற்றி படங்களை தொடர்ந்து கடந்த ஆண்டு இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கேத்ரின் தெரசா நடிப்பில் வெளிவந்த 'கதாநாயகன்' படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. இந்த படத்தினை தொடந்து விஷ்ணு தற்பொழுது சிலுக்குவார்பட்டி சிங்கம், ராட்சசன், ஜகஜால கில்லாடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படியாக புதுமுக இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பிற்கான சிறப்பு பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. நடிகர் விஷ்ணு இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு அவருக்கு சொந்தமான ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’தயாரிப்பு நிறுவனத்தின்  மூலம் படத்தினையும் தயாரிக்கவுள்ளார். 

 

இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இந்நிலையில் படத்தின் நாயகியை படக்குழு தேர்வு செய்துள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கவுள்ளார். இவர் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ராஜசேகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை விஷ்ணு அவரது ட்விட்டரில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். மேலும் படத்தில் இணையவுள்ள இதர நடிகர் -நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், படத்தின் டைட்டில் மற்றும் படப்பிடிப்பு தேதி போன்றவற்றை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் தெலுங்கு பிரபல மகள்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்