ads

விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் தகவல்

vishnu vishal new project

vishnu vishal new project

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால் பலே பாண்டியா, நீர் பறவை, குள்ளநரி கூட்டம், ஜீவா போன்ற படங்களை தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் அதிகளவு காமெடிகள் இடம் பெற்றிருந்ததால் சிறியவர் முதல் பெரியர்வர்கள் வரை அனைவரின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

செல்லா இயக்கத்தில் பிக் பாஸ் ஓவியாவுடன் இணைந்து 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து 'இடம் பொருள் ஏவல்', புது முக இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் 'ராட்சசன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக விஷ்ணு விஷால் அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த பட சம்பந்தப்பட்ட  தகவலை நாளை வெளியிடுவதாக  நடிகர் விஷ்ணு சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்..     

விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் தகவல்