விஜய் ஆண்டனியின் காளி படத்திற்கு குட் பை சொன்ன பலூன் நாயகி

       பதிவு : Jan 14, 2018 09:05 IST    
anjali kaali shoot complete anjali kaali shoot complete

நான்' படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து சலீம், சைத்தான், எமன், பிச்சைக்காரன்,  போன்ற படங்களில் நடித்திருந்தார். இதற்கு அடுத்த படியாக ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் அண்ணாதுரை படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் மூலம் ஆண்டனி இரு வேடத்தில் நடித்தது எடிட்டிங் போன்ற பல செயல்களை முதல் முறையாக மேற்கொண்டிருந்தார். இந்த படம் தெலுங்கில் 'இந்திரசேனா' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. 

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் நல்ல வெற்றியை பெற்றிருந்தது. இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்பொழுது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'காளி' படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி, ‘படைவீரன்’ புகழ் அம்ரிதா என நான்கு நாயகிகள் இணைத்துள்ளனர். பலூன் படத்தை தொடர்ந்து நடிகை அஞ்சலி இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த தகவலை அஞ்சலி கடந்த நாளில் ட்விட்டர் மூலம் தெரிவித்து ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்பொழுது வந்த தகவலில் அஞ்சலி சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் எடுக்கப்பட்டு விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

 


விஜய் ஆண்டனியின் காளி படத்திற்கு குட் பை சொன்ன பலூன் நாயகி


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்