ஓவிய கலைஞராக மாறிய நடிகை ஹன்சிகா

       பதிவு : Apr 20, 2018 17:37 IST    
நடிகை ஹன்சிகா வரைந்த புத்தர் ஓவியம் ஒன்றை நடிகர் ஷ்ரியா ரெட்டி பகிர்ந்துள்ளார். நடிகை ஹன்சிகா வரைந்த புத்தர் ஓவியம் ஒன்றை நடிகர் ஷ்ரியா ரெட்டி பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக நடிகை ஹன்சிகா வலம் வருகிறார். இவருடைய படங்களுக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு இருக்கும். மாடல் அழகியான இவர் ஹிந்தி மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் நாயகியாக அறிமுகமானார். 2003-இல் திரையுலகிற்கு அறிமுகமான இவர் 2011-இல் வெளியான 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

இதன் பிறகு இவருக்கு தமிழ் மொழியில் ரசிகர்களிடம் கிடைத்த மாபெரும் வரவேற்பினால் இவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். முன்னணி நாயகியான இவர் நிஜ வாழ்க்கையில் சமூக அக்கறையுடனும், மனித நேயத்துடன் செயல்பட்டு வருகிறார். 25 தாழ்த்தப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு இவர் பணஉதவி செய்துள்ளார். மேலும் இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட 10 பெண்களின் மருத்துவ செலவையும் மேற்கொண்டுள்ளார். இது தவிர 'சென்னை டர்ன்ஸ் பிங்க்' என்ற சமூக நல அமைப்பின் தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.

 

இந்த அமைப்பு நகர்ப்புற பெண்களுக்கு கேன்சர் பற்றிய விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இப்படி பொது மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை மேற்கொண்டு வரும் இவர் தற்போது ஓவியராகவும் மாறியுள்ளார். இவரின் இந்த ஓவியத்தை நடிகை ஸ்ரீயா ரெட்டி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இவரின் ஓவியத்தை பார்த்து நடிகர் விவேக் "உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் ஹன்சிகா. திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள். இதனை வைத்து கண்காட்சியை நடத்தினால், அதில் வரும் பணமும் நன்கொடை வழங்க உதவியாக இருக்கும்" என பாராட்டியுள்ளார். இதற்கு ஹன்சிகாவும் "நன்றி சார்..அது தான் திட்டம்" என பதிலளித்துள்ளார்


ஓவிய கலைஞராக மாறிய நடிகை ஹன்சிகா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்