ads
சண்டக்கோழி 2 படப்பிடிப்பில் கலந்து கொண்ட கீர்த்தியின் ஃபேமிலி
மீனா ஸ்ரீ (Author) Published Date : Jan 13, 2018 15:30 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ' இரும்பு திரை'. இப்படத்தினை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட உள்ளனர். தெலுங்கில்'அபிமன்யுடு' என்ற தலைப்பில் வெளியாகிறது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ரூபன் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். மேலும் இப்படம் ஜனவரி 26 இல் வெளிவரவுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கடந்த 2005ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது குறிப்பிட தக்கது.
விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ சார்பில் அவரே தயாரித்து வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக இணைந்துள்ளார். இவர்களுடன் இணைந்து வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பில் நடித்துவருகின்றனர். மேலும் முதல் பாகத்தினை போன்று இரண்டாம் பாகத்திலும் ராஜ் கிரணின் சில காட்சிகள் ரசிகர்களை பேசவைக்கும் அளவிற்கு உருவாகியுள்ளதாம்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சக்தி ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இந்நிலையில் நாயகி கீர்த்தி சுரேஷின் கும்பத்தினர் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு விசிட் அடித்துள்ளது. மேலும் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்பொழுது பரவி வருகிறது.