ads

நடிகை நமீதாவுக்கு வரும் 24-இல் திருமணம்

நடிகை நமீதாவுக்கு வரும் 24-இல் திருமணம்

நடிகை நமீதாவுக்கு வரும் 24-இல் திருமணம்

தென்னிந்திய திரைப்பட நடிகையான நமீதா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளிவந்த 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் ஏய், சாணக்கியா, பம்பரக்கண்ணாலே, ஆணை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்த நடிகர் பரத் உடன் கூட்டுச்சேர்ந்தார். 

கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது 'பொட்டு' என்ற படத்தில் நடித்து வருகிறார். 36 வயதான இவருக்கு தற்போது திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அவருடன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற ரைசா அவரது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடிகை நமீதா வரும் 24-ஆம் தேதி வீரா என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.

நடிகை நமீதாவுக்கு வரும் 24-இல் திருமணம்