பாகுபலி நாயகன் பிரபாஸின் புது பட தகவல்

       பதிவு : Feb 09, 2018 15:35 IST    
prabhas 20th film updates prabhas 20th film updates

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் தமிழில் 'பாகுபலி' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவந்து திரையுலகில் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தின் மூலம் பிரபாஸுக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்திருந்தது. இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து பிரபாஸ் தனது 19வது படத்தினை இயக்குனர் சுஜித் என்பவரின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாக்கி வரும் 'சாஹூ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இருந்து கடந்த நாட்களில் வெளிவந்த போஸ்டர், பிரபாஸின் அதிரடி வசனம் கலந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.            

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கி தற்பொழுது அதிரடி சண்டை காட்சிகளுக்காக துபாய் பகுதியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்குவதாக தகவல் வந்துள்ளது. மேலும் இப்படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கி ஏப்ரல் மாதம் 20ம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தினை தொடந்து பிரபாஸ் நடிக்கவிருக்கும் 20வது படத்திற்கான தகவலும் வெளிவந்துள்ளது. இந்த படத்தினை தெலுங்கு பட இயக்குனர் ராதா கிருஷ்ணா குமார் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இயக்கவுள்ளார்.    

 

இன்னும் பெயரிடப்படாத பிரபாஸின் 20வது படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பா பகுதியில் நடைபெற இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் இப்படத்தின் நாயகியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெஜிதே நடிகைருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தமிழில் வெளிவந்த 'முகமூடி' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கு திரையில் சில படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.     


பாகுபலி நாயகன் பிரபாஸின் புது பட தகவல்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்