ads

சிவகார்த்திகேயனின் புது படத்தில் இணையும் ரகுல் ப்ரீத் சிங்

actress rakul preet singh joined in sivakarthikeyan new movie

actress rakul preet singh joined in sivakarthikeyan new movie

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக 'வேலைக்காரன்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். 

இந்தபடத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்திலும், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இதில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவர் ஒப்புக்கொள்ள உள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர்ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தை 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்டி ராஜா தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் பணிபுரியவுள்ள இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள்ம குறித்த விவரம் விரைவில் வெளியாகவுள்ளது. 

சிவகார்த்திகேயனின் புது படத்தில் இணையும் ரகுல் ப்ரீத் சிங்