சாய் பல்லவியின் கரு படத்தின் இசை நாளை வெளியீடு

       பதிவு : Feb 23, 2018 15:51 IST    
Director AL Vijay new movie Karu audio launch on tomorrow Director AL Vijay new movie Karu audio launch on tomorrow

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் தற்போது 'கரு' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு நேரடியாக தமிழுக்கு நாயகியாக அறிமுகமாகும் முதல் படமாகும். இதற்கு முன்னதாக தமிழில் நடிகர் பிரசன்னாவின் 'கஸ்தூரி மான்', நடிகர் ஜெயம் ரவியின் 'தாம் தூம்' போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதன் பிறகு இவர் மலையாள திரையுலகில் அறிமுகமான 'ப்ரேமம்' படம் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் மாபெரும் வரவேற்பை பெற்றார். ப்ரேமம் படத்தின் மூலம் இவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதனை அடுத்து இவர் தமிழில் நாயகியாக நடித்துள்ள முதல் படம் 'கரு'. இந்த படத்தை தெலுங்கில் 'கணம்' என்ற தலைப்பில் வெளியிட உள்ளனர்.

 

இந்த படம் அடுத்த மாதம் மார்ச் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி நடிப்பில் தமிழில், நடிகர் தனுஷின் 'மாரி 2' மற்றும் இயக்குனர் செல்வராகவனின் 'சூர்யா 36' போன்ற படங்கள் உருவாகி வருகிறது. பெண்களின் முக்கியத்துவத்தை பேசும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் ஏஎல் விஜய் ஹாரர் கலந்து உருவாக்கியுள்ளார்.

முன்னதாக இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ஹாரர் படமான 'தேவி' படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் த்ரில்லர் கலந்த ஹாரர் படமாக உருவாக்கியுள்ளார். மேலும் தற்போது இயக்குனர் ஏஎல் விஜயின் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள 'லக்ஷ்மி' படத்தின் டீசரை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது.

 


சாய் பல்லவியின் கரு படத்தின் இசை நாளை வெளியீடு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்