Policies

About Us விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் Disclaimer Policy Privacy Policy

Contact

Contact Us Twitter Facebook Google +
Copyright Stage3 News
2018. All Rights Reserved

கார்த்திக் சுப்பராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ள சிம்ரன்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் முதல் முறையாக கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணைய உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ள இந்த படத்தில் நடிக்க உள்ள நாயகிகள் குறித்த தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தீபிகா படுகோனே, அஞ்சலி மற்றும் த்ரிஷா ஆகியோரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் முன்னாள் நடிகையான சிம்ரனின் பெயரும் தற்போது அடிபடுகிறது.

1995-2005 வரை தமிழ் சினிமாவில் கொடி கட்டி பரந்த சிம்ரன் தற்போது 42 வயதை எட்டி விட்டதால் நடிப்பில் கவனம் செலுத்தாமல் குடும்பத்தை கவனித்து வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது ஆண்டுக்கு ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இந்த ஆண்டு வணங்காமுடி, துருவ நட்சத்திரம், சீம ராஜா உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இந்த படங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிம்ரன், ரஜினிகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற 'சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த கங்கா கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது.

அது தவறி விட்டதால் தற்போது மீண்டும் அவருக்கு ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் பேசிய ரஜினி, தன்னுடைய மன அழுத்தம், உடல்நிலை சரியின்மை இவற்றை போக்க நடிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும், 67 வயதை எட்டிய எனக்கு மகள் வயது நாயகிகளுடன் டூயட் பாடுவது சரியாக இருக்காது, இனி இதை தவிர்ப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி ரஜினியின் அடுத்த படத்திற்கும் முன்னாள் நாயகிகளை படக்குழு அணுக உள்ளது. இதனால் தற்போது இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கபடுகிறது. 


கார்த்திக் சுப்பராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ள சிம்ரன்

செய்தியாளர் பற்றி
செய்தியாளர்
விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார்.
1B, Commercial Site, TNHB,
HUDCO Colony, Peelamedu,
Coimbatore, Tamil Nadu
India - 641004.
9585585516 vigneshanjuvi06@gmail.com