ads
ரஜினி படத்தை தொடர்ந்து இணையத்தில் கசிந்த அஜித் விஜய் சூர்யா படத்தின் கதைகள்
வேலுசாமி (Author) Published Date : May 22, 2018 10:55 ISTபொழுதுபோக்கு
தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களான அஜித், விஜய், சூர்யா ஆகியோரது படங்களின் படப்பிடிப்பு பணிகள் தீபாவளி வெளியீட்டை நோக்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் சங்கரின் 2.0 படத்தின் கதை இணையத்தில் வெளியானதை தொடர்ந்து தற்போது அஜித், விஜய், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் விசுவாசம், தளபதி 62, என்ஜிகே படங்களின் கதைகள் குறித்த தகவல்களும் இணையத்தில் ரசிகர்களிடம் உலாவி வருகிறது. தற்போது விவேகம் படத்திற்கு பிறகு மீண்டும் அஜித், சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் திரை ஜாம்பவான்கள் பலர் இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளர் பிரச்சனைக்கு பிறகு ஐதராபாத்தில் துவங்கியுள்ளனர். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் அண்ணன் தம்பியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அண்ணனான அஜித் பெரிய பிரச்சனையில் மாட்டி கொண்டு ஜெயிலுக்கு சென்று விடுகிறார். கிராமத்தில் வசித்து ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் சேட்டைகளை செய்து வருகிறார் தம்பியான அஜித்குமார். இவர் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து கிராம மக்களை தன் வசம் வைத்திருக்கும் அரசியல்வாதி வில்லன்களை தட்டி கேட்கிறார்.
இதனால் ஒரு கட்டத்தில் தம்பி கொல்லப்படுகிறார். பின்னர் ஜெயிலில் இருந்து வெளியே வரும் அண்ணன், தம்பி கொல்லப்பட்டதை அறிந்து வில்லன்களை பழிவாங்குவதே படத்தின் கதை. இந்த படத்தில் முக்கிய சமூக பிரச்சனையான நியூட்ரினோ திட்டத்தை மைய கதையாக வைத்துள்ளனர். இதன் பிறகு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கத்தி, துப்பாக்கி படங்களுக்கு மூன்றாவது முறையாக விஜய் நடிப்பில் தளபதி 62 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய், சாதாரண சாமானிய இளைஞனாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.
ஆனால் இவருக்கு எதிர்பாராத விதமாக அரசியல் வாதிகளான வரலட்சுமி, ராதாரவி ஆகியோர் மூலம் தொல்லைகள் வருகிறது. இதனை எதிர்த்து போராடும் விஜய், ஒரு கட்டத்தில் பெரும் இழப்புகளை சந்திக்கிறார். இப்படி விவசாயத்திற்கும், மக்களுக்கும் பெரும் தொந்தரவாக இருக்கும் அரசியல்வாதிகளை எதிர்க்க தான் அரசியல் வாதி ஆக வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். இவருக்கு இளைஞர்களின் பலத்த ஆதரவுகள் கிடைக்கிறது. இதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள், அரசியல்வாதிகளை எதிர்த்து வெற்றி கண்டரா என்பதை படத்தின் கதையாக வைத்துள்ளனர். அரசியலையும், விவசாயத்தையும் மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் மாபெரும் அரசியல் மாநாடு போன்ற காட்சிகளையும் படமாக்கி வருகின்றனர்.
இதனை அடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் முதன் முறையாக சூர்யா இணைந்து நடித்து வரும் படம் 'என்ஜிகே (NGK - நந்த கோபால குமரன்)'. இந்த படத்தில் நாயகிகளாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படம் ஒரு சமூக போராளியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவல் குறித்து இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டரில் "வலைத்தளத்தில் என்ஜிகே கதை குறித்த வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் நாங்கள் அதை கண்டு கொள்ளவில்லை. இதனை உங்களுடைய கற்பனைக்கே விடுகிறோம், நாங்கள் தற்போது படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.