ads

மணிரத்னம் இயக்கவுள்ள மல்ட்டி ஸ்டார் படத்தில் இணையும் பாலிவுட் நடிகை

aditi rao hydari joins maniratnam new movie

aditi rao hydari joins maniratnam new movie

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் 'காற்று வெளியிடை' படத்தின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்பட நட்சத்திரங்களை இணைந்து ஒரு புது படத்தினை இயக்கவுள்ளார். இந்த படத்தில்  'தனி ஒருவன்' அரவிந்த் சாமி, சிலம்பரசன், பிரகாஷ் ராஜ், ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். மேலும் இப்படத்தில் வைரமுத்து எழுதிய பாடலுக்கு 'இசை புயல்'  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல்களில் 3 பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை முடித்திருப்பதாக தகவல் முன்னதாகவே வெளிவந்திருந்தது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி காவல் துறை அதிகாரியாக அதிரடி காட்சியில் களமிறங்கவிருப்பதாகவும் தகவல் வந்திருந்தது.  

தற்பொழுது வந்த தகவலில் இன்னும் சில நட்சத்திரங்களை இணைந்திருக்கிறார்களாம். இவர் இயக்கத்தில் வெளிவந்த 'காற்று வெளியிடை' படத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஷைதாரி இணைந்துள்ளார். மேலும் மலையாள திரையுலகில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்ற 'அங்கமாலி டைரீஸ்' படத்தில் நடித்திருந்த ஆண்டனி வர்கீஸும் இணைய இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

இயக்குனர் மணிரத்னம் முதல் முறையாக 'பல்லவி அனுபல்லவி' என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் இயக்கிய மௌன ராகம், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, அஞ்சலி, ரோஜா, பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், குரு போன்ற படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் இப்படங்களின் மூலம் பல விருதுகளையும் இயக்குனர் மணிரத்னம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது படங்கள் காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது சிறப்பாக பணியாற்றுவர். இவருடைய படங்கள் சுருக்கமான வசனங்களுக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை

யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமல், தன் முதல் படமாகிய "பல்லவி அனுபல்லவி" படத்தினை இயக்கி, இப்படத்தின் மூலம் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான கர்நாடக அரசின் திரைப்பட விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது படங்கள் என்றாலே  இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் இயக்கவுள்ள மல்ட்டி ஸ்டார் படத்தில் இணையும் பாலிவுட் நடிகை