ads

முஸ்லீம் பெண் கதாபாத்திரத்தில் 'அமலா பால்'

amala paul new movie

amala paul new movie

தமிழ் திரையுலகில் 'வீரசேகரன்' படத்தின் மூலம் அறிமுகமாகி 'மைனா' படத்தில் பிரபலமான அமலாபால் தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னட போன்ற திரையுலகில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. இந்த படத்தில் 'தனி ஒருவன்' அரவிந்த் சாமி நாயகனாக நடிக்க இயக்குனர் சித்திக் இப்படத்தினை இயக்கியுள்ளார். மேலும் இப்படம் மலையத்தின் ரீமேக் என்பது குறிப்பிட தக்கது.      

இந்நிலையில் இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கில் 'ஆயுஷ்மான் பவ' என்ற புது படத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தினை புதுமுக இயக்குனர் சரன்தேவ் இயக்கவிருக்கிறார். காதல் கதையாக உருவாக்கவுள்ள இப்படத்தில் அமலாபால் முஸ்லீம் பெண்ணாக நடிக்க இருப்பதாகவும் தகவலில் வந்துள்ளது. மேலும் இவருடன் இணைந்து ஹிந்தி, தெலுங்கு திரைப்பட நாயகி சினேகா உல்லால் நடிக்கவுள்ளார். இப்பட்டத்தின் படப்பிடிப்புகள் இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது.       

முஸ்லீம் பெண் கதாபாத்திரத்தில் 'அமலா பால்'