ads

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' இசை வெளியீடு

baskar oru raskal movie audio lauch

baskar oru raskal movie audio lauch

2015ம் ஆண்டு இயக்குனர் சித்திக் எழுத்து மற்றும் இயக்கத்தில் மலையாள திரையுலகில் வெளிவந்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' திரைப்படத்தில் மம்மூட்டி, நயன்தாரா, ஜே.டி.சக்ரவர்த்தி, சனூப் சந்தோஷ், பேபி அனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் தற்போது நடந்து வருகிறது. இதனை தமிழில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்ற தலைப்பில் வெளியிட உள்ளனர்.  

இந்த படத்தில் அரவிந்சாமி நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து மாஸ்டர் ராகவன், நடிகர் சித்திக், 'தெறி' படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள நடிகை மீனாவின் மகள் பேபி நானிகா போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் இசையை இன்று மாலை 6 மணிக்கு  வெளியிடுவதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது.   

baskar oru rascal moviebaskar oru rascal movie

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' இசை வெளியீடு