நடிகர் அமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் ட்ரைலர் வெளியீடு

       பதிவு : Mar 28, 2018 16:10 IST    
75 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 75 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

75 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, பாடகராக மற்றும் தொகுப்பாளராக திரைத்துறையில் 47 வருடங்களாக நிலைத்து வருகிறார். 70 வயதை கடந்த பிறகும் இவருடைய படங்களுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறையவில்லை. ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான தோற்றத்தினாலும், நடிப்பினாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் சர்க்கார் 3, பிராங்கி போன்ற படங்களை தொடர்ந்து தற்போது 102 நாட் அவுட் மற்றும் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் 102 நாட் அவுட் படத்தில் 102 வயது முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடைய மகன் கதாபாத்திரத்தில் ரிஷி கபூர் 75 வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்பா-மகன் இருவருக்கும் இடையே இருக்கும் லொள்ளையும், பாசத்தையும் பேசும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.

 

இந்த படத்தை நடிகர் மற்றும் இயக்குனரான உமேஷ் ஷுக்லா இயக்கியுள்ளார். இவர் 'ஆள் இஸ் வெல்' படத்திற்கு பிறகு மூன்று வருடங்களுக்கு பிறகு 102 நாட் அவுட் படத்தை இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் வரும் மே மாதம் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது.


நடிகர் அமிதாப் பச்சனின் 102 நாட் அவுட் ட்ரைலர் வெளியீடு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்