துல்கர் சல்மான் படத்தில் இணைந்த கலக்க போவது யாரு ரக்சன்

       பதிவு : Feb 24, 2018 12:07 IST    
Kalaka Povathu Yaru Anchor Rakshan joining the cast of Dulquer Salman Kalaka Povathu Yaru Anchor Rakshan joining the cast of Dulquer Salman's Kannum Kannum Kollaiyadithaal movie

நடிகர் துல்கர் சல்மான் தற்போது இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 'நடிகையர் திலகம்', அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்தியில் தற்போது உருவாகி வரும் 'கர்வான்' படத்திலும் நடித்து வருகிறார்.

'கர்வான் படம் இவர் இந்தியில் அறிமுகமாகும் முதல் படமாகும். மேலும்  இயக்குனர் அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை காதலர் தினத்தில் படக்குழு வெளியிட்டது.

 

இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை ரிது வர்மா நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது என்னுடைய நண்பன் மற்றும் கூட்டாளியான ரக்சன் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் துல்கர் சல்மான் அவரது டிவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'கலக்கபோவது யாரு' நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களாக ரக்சன் மற்றும் ஜாக்லின் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இருவரும் தற்போது திரையுலகில் அறிமுகமாக உள்ளனர்.

 

தொகுப்பாளர் ஜாக்லின், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவுக்கு சகோதரியாக நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து தற்போது தொகுப்பாளர் ரக்சன், துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் துல்கர் சல்மானுக்கு நண்பனாக நடிக்க உள்ளார்.


துல்கர் சல்மான் படத்தில் இணைந்த கலக்க போவது யாரு ரக்சன்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்