காதலர் தினத்தில் சர்ப்ரைஸ் கொடுக்கும் அனிருத்

       பதிவு : Feb 13, 2018 12:04 IST    
anirudh surprise for this valentines day anirudh surprise for this valentines day

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வளம் வரும் அனிருத் தற்பொழுது தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் இசையால் ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்தி வருகிறார். இவரது இசையில் முதல் முதலாக வெளிவந்த '3' படத்தின் வரவேற்பு இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மேலும் 'ஒய் திஸ் கொலவெறி' பாடலுக்கு உலகளவில் ட்ரெண்ட்டாகி யூ - ட்டியூபில் அதிகளவு பார்க்கப்பட்ட வீடியோவாக திகழ்ந்தது. இதன் காரணத்தினால் இப்பாடலுக்காக யூ -ட்டிபிள் இருந்து 'கோல்டன் விருது' வழங்கப்பட்டது.  

இந்த வெற்றி படத்தினை தொடந்து அனிருத் பல முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களின் படங்களில் இசையமைக்க துவங்கினார். தற்பொழுது தெலுங்கு சூப்பர் ஸ்டாரான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் 'அஞ்ஞாதவாசி' என்ற படத்தில் இசையமைத்து வருகிறார். இவர் இசையில் இருந்து கடந்த நாட்களில் வெளிவந்த இப்படத்தின் பாடலுக்கு தெலுங்கு திரையுலக ரசிகர்களுக்கிடையில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

 

மேலும் அனிருத் பொதுவாக ஏதாவது ஸ்பெஷல் தினம் வந்தால் புது பாடல்களை வெளியிடுவது அவரது வழக்கத்தில் ஒன்றாகும். இந்நிலையில் நாளை (14.2.18) வரவிருக்கும் காதலர் தினத்தினை முன்னிட்டு ஒரு பாடலை வெளியிட உள்ளார். மேலும் இப்பாடலுக்கு 'ஜூலி' என்று தலைப்பினை வைத்து அவரது ட்விட்டர் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அனிருத் ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் பாடலின் தலைப்பு 'பிக் பாஸ்' புகழ் ஜூலியின் பெயரை வைத்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.          


காதலர் தினத்தில் சர்ப்ரைஸ் கொடுக்கும் அனிருத்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்