ads
தெலுங்கில் ட்ரெண்டாகும் அனிருத்தின் இசை
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 13, 2017 18:40 ISTபொழுதுபோக்கு
தமிழ் திரையுலகில் '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர் இசையில் வெளிவந்த 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதன் பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னனி இசையமைப்பாளர்களின் ஒருவரானார்.
இது வரை தமிழில் மட்டும் திறமையை வெளிப்படுத்திருந்த அனிருத், தற்பொழுது தெலுங்கு திரையுலகில் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் தெலுங்கின் முன்னனி நடிகர் பவன் கல்யாணின் 25வது படமான 'அஞ்ஞாதவாசி' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
இந்த படத்தின் 'பைட்டிக்கொச்சி சூஸ்தே...' என்ற சிங்கிள் பாடலை கடந்த மாதத்தில் வெளியிட்டனர். இந்த பாடலுக்கு தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் நேற்று மற்றொரு சிங்கிள் பாடலான 'காலி வலுகா..'.என்ற பாடலை வெளியிட்டனர். இந்த பாடலுக்கும் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இதனை அடுத்து இன்று காலை வெளிவந்த காலி வலுகா....என்ற சிங்கிள் பாடலில் பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு சமர்ப்பிக்கும் விதமாக அனிருத் புது வித ட்ரெண்டை கையாண்டுள்ளார். இந்த பாடலில் அனிருத் பாடிக்கொண்டே ஆடிய இடங்களை சுற்றி பவன் கல்யாண் வரைபடங்கள், போஸ்டர்கள், கட்டவுட்கள் நிறைந்து காணப்பட்டது. இந்த பாடல் பவன் கல்யாண் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது.
 
        								 
                                                    
                                                   