×

ads

'நிமிர்' படத்தின் பாடலை வெளியிடும் ஏஆர் ரஹ்மான்

nimir song release by ar rahman
nimir song release by ar rahman

கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிவந்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற மலையாள படத்தின் ரீமேக்காக உருவாகிவரும் படம் 'நிமிர்'. இந்த படத்தை இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்குகிறார். சந்தோஷ் டி குருவில்லா, முன்சாண்ட் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா, பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத், தர்புக சிவா ஆகியோர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

நிமிர் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் விரைவில் வெளிவரவுள்ளது அதற்கான பணிகள் தற்போது மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் 'நெஞ்சில் மாமழை..' என்ற பாடலை இன்று மாலை 5 மணிக்கு ஆஸ்கர் விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

'நிமிர்' படத்தின் பாடலை வெளியிடும் ஏஆர் ரஹ்மான்

ads