ads

'நிமிர்' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

nimir movie press meet

nimir movie press meet

கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிவந்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற மலையாள படத்தின் ரீமேக்காக உருவாகிவரும் படம் 'நிமிர்'. இந்த படத்தை இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்குகிறார். சந்தோஷ் டி குருவில்லா, முன்சாண்ட் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா, பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத், தர்புக சிவா ஆகியோர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சமீபத்தில் விஜய் டிவி அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. 

இதில் இயக்குனர் பிரியதர்சன், நடிகர் உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் சந்தோஷ் டி குருவில்லா மற்றும் பார்வதி நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின் "இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது தணிக்கை வாரியத்திற்கு படத்தை அனுப்பியுள்ளோம். இந்த படத்தை ஜனவரி 14 முதல் 26 இல் வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்த படத்தில் இயக்குனர் மகேந்திரன் சாருடன் நடித்ததில் மகிழ்ச்சி. அவருடன் நடிக்கும்போது நிறைய கற்றுக்கொண்டேன். இயக்குனர் பிரியதர்ஷன் அவர்கள் நான் நடித்த எந்த படத்தையும் பார்த்ததில்லை. அதனால்தான் என்னை தேர்வு செய்தார் என்று நினைக்கிறேன். இந்த படத்தை பார்த்த எனது மனைவி 'மனிதன்' படத்திற்கு பிறகு பெருமை தரக்கூடிய படமாக 'நிமிர்' விளங்கும் என்று சொன்னார்."

'நிமிர்' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு