ads

நிமிர் படத்தின் தொலைக்காட்சி உரிமையை அதிக விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்

nimir movie tv rights

nimir movie tv rights

கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிவந்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற மலையாள படத்தின் ரீமேக்காக உருவாகிவரும் படம் 'நிமிர்'. இந்த படத்தை இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்குகிறார். சந்தோஷ் டி குருவில்லா, முன்சாண்ட் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா, பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத், தர்புக சிவா ஆகியோர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். 

இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை அதிக விலை கொடுத்து விஜய் டிவி வாங்கியுள்ளது. இது குறித்து விஜய் டிவி மேலாளர் கிருஷ்ணன் குட்டி கூறியது "சுவாரிஷ்யமான படங்களையும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்களையும் கண்டெடுத்து வாங்குவதில் நாங்கள் முனைப்போடு உள்ளோம். அப்படி அமைந்த படம் தான் 'நிமிர்'. இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் வரும் காலங்களில் இணைந்து செயல்பட ஆவலோடு உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை விரைவில் வெளிவர இருப்பதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நிமிர் படத்தின் தொலைக்காட்சி உரிமையை அதிக விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்