சங்க தலைவர்க்கு ஜோடி சின்னத்திரை பிரபலம்

       பதிவு : Nov 13, 2017 11:30 IST    
சங்க தலைவர்க்கு ஜோடி சின்னத்திரை பிரபலம்

இயக்குனரில் நல்ல வரவேற்பினை பெற்ற சமுத்திரக்கனி நடிப்பிலும் திறமை அதிகளவு இருப்பதால் அதிலும் ஆர்வத்தினை காட்டி வருவதோடு, முன்னணி நடிகர்களுடன் இணைந்து முக்கிய வேடத்தல் நடித்து வருகிறார். தற்பொழுது கொளஞ்சி, ஆண் தேவதை, காலா, மதுர வீரன், ஏமாளி, கோலி சோடா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.      

இந்நிலையில் மணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிக்கும் சங்க தலைவர் படத்தில் நடிக்கவுள்ளார். சேலம், ஈரோடு, திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் அதிகளவு முக்கியத்துவம் கொண்ட கைத்தறி தொழிலை அடிப்படையாக கொண்டு படத்தினை எடுக்கவுள்ளனர். வெற்றிமாறன் தயாரிக்கும் இப்படத்தில் கைத்தறி தொழிலாளியாக சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார்.    

 

கைத்தறியை மையப்படுத்தி எடுக்கவுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக பிரபல சின்னத்திரை டிவி தொகுப்பாளர் ரம்யா நடிக்கவுள்ளார். இவர் மொழி, மங்காத்தா, வனமகன், ஓ காதல் கண்மணி போன்ற பங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் சமுத்திரக்கனி மனைவியாக அறிமுகமாகும் இப்படத்தில் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.      


சங்க தலைவர்க்கு ஜோடி சின்னத்திரை பிரபலம்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்