ads

தமிழ் ராக்கர்ஸ்க்கு எதிராக கிளம்பிய 'இப்படை வெல்லும்'

case against tamilrockers

case against tamilrockers

தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் சட்டத்திற்குப் புறம்பாக திரைப்படங்களை ஆன்லைனில் வெளியிடும் இணையத் தளமாகும். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களை அவர்களின் இணையத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். புதியத் திரைப்படங்களை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சவாலாக திரையிடப்பட்ட அன்றே இணையத்தில் பரப்பி வருகின்றனர். சமீபத்தில் இந்த இணையத்தளத்தின் உரிமையாளரென நினைத்து கவுரிசங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர், ஆனால் இவருக்கும் இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 

அதுமட்டுமின்றி இவர் கைதான அன்று வெளியான 'துப்பறிவாளன்' திரைப்படம் முதல் தரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் கவுரவ் நாராயணன் இயக்கத்தில் நவம்பர் 9-ஆம் தேதி வெளியான 'இப்படை வெல்லும்' திரைப்படத்தை சட்ட விரோதமாக வெளியிட்டதாக சிபிசிஐடி அமலாக்கத்துறை போலீசார் பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் சார்பில் ராஜசேகரன் என்பவர் இந்த புகார் மனுவை கொடுத்துள்ளார். ராஜசேகரன் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் போலீசார் தற்போது தமிழ் ராக்கர்ஸ் மீது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் ராக்கர்ஸ்க்கு எதிராக கிளம்பிய 'இப்படை வெல்லும்'