மணிரத்னம் இயக்கத்தில் இணைந்த என்னை அறிந்தால் வில்லன்

       பதிவு : Feb 10, 2018 11:51 IST    
arun vijay in maniratnam chekka chivantha vaanam arun vijay in maniratnam chekka chivantha vaanam

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தற்பொழுது முடிவடைந்த படம் 'தடம்'. இந்த படத்தினை தொடர்ந்து அருண் விஜய் மற்றொரு பிரமாண்ட படத்தில் நடிக்கவிருப்பதாக தகவலை கடந்த நாட்களில் அவரது ட்விட்டர் மூலம்  வெளியிட்டிருந்தார். இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு நேற்று (9.2.2018) வெளிவந்துள்ளது. இவர் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கவிருக்கும் மல்ட்டி ஸ்டார் படத்தில் இணைந்துள்ளார். இந்த தகவலை அருண் விஜய் அவரது ட்விட்டரில் பதிவு செய்து படத்தின் 'செக்கச்சிவந்த வானம்' என்ற டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.     

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாக உள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு, 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, 'தனி ஒருவன்' அரவிந்த் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், 'காற்று வெளியிடை' புகழ் அதிதி ராவ் போன்ற திரையுல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தில் காவல் துறை அதிகாரியாக விஜய் சேதுபதி வளம் வர இருப்பதாக கடந்த நாட்களில் படக்குழு தகவலை வெளியிட்டிருந்தது. மேலும் மற்ற நடிகர்களின் கதாபாத்திரத்தை படக்குழு வெளியிடாமல் சஸ்பென்சை அதிகரித்து வருகிறது. நடிகர் அருண் விஜய் 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்ததின் காரணத்தினால் இப்படத்திலும் வில்லன் கெட்டப்பில் நடிக்கலாம் என ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.       

 


மணிரத்னம் இயக்கத்தில் இணைந்த என்னை அறிந்தால் வில்லன்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்