ads

கஜினிகாந்த் படத்தின் பார் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

ghajinikanth movie first single release

ghajinikanth movie first single release

கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவந்த 'ஹர ஹர மஹாதேவகி' காமெடி படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. இந்த படத்தினை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருந்தார் . இந்த படத்தினை தொடர்ந்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற மற்றொரு படத்தினை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிப்பில் 'கஜினிகாந்த்' என்ற படத்தினை இயக்கிவருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யா பிறந்த நாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். 'ஸ்டுடியோ கிரீன்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து வரும் இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா சைகல் இணைந்துள்ளார். இவர் தற்பொழுது நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து 'ஜூங்கா' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் 'கஜினிகாந்த்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்த படத்தின் டீசருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இடம்பெறும் பார் பாடலின் பர்ஸ்ட் சிங்கில் டிராக் ஒன்றை படக்குழு இன்று வெளியிடவுள்ளது.

கஜினிகாந்த் படத்தின் பார் பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு