கடைசி நேரத்தில் மீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்

       பதிவு : May 11, 2018 11:24 IST    
இன்று வெளியாக இருந்த அரவிந் சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் மீண்டும் தள்ளிபோகியுள்ளது. இன்று வெளியாக இருந்த அரவிந் சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் மீண்டும் தள்ளிபோகியுள்ளது.

நடிகர் அரவிந்த் சாமி மற்றும் அமலா பால் நடிப்பில் இன்று வெளியாக இருந்த படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. இந்த படம் கடந்த மார்ச் மாதமே வெளியாக இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த தயாரிப்பாளர் பிரச்சனையால் தள்ளி போகி கொண்டே வருகிறது. தயாரிப்பாளர் வேலை நிறுத்தத்திற்கு பிறகு ரிலீஸ் தேதி அறிவித்த பின்னர் மீண்டும் வெளியீடு தேதி தள்ளி வைப்பது இரண்டாவது முறையாகும். இன்று வெளியாக இருந்த இந்த படத்திற்கு ஆன்லைன் புக்கிங் முன்னதாகவே தொடங்கப்பட்ட நிலையில் மீண்டும் தள்ளிப்போனது ரசிகர்களுக்கு வேதனை அளித்துள்ளது.

இதனால் இந்த படத்தின் நாயகன் அரவிந் சாமியும் அதிருப்தி அடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டரில் "இன்று வெளியாக இருந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் மீண்டும் தள்ளிப்போனது. எதனால் தள்ளிப்போனது என்றே தெரியவில்லை. இந்த படத்திற்காக ஆன்லைன் புக்கிங் தொடங்கப்பட்டு மீண்டும் இந்த படத்தை தள்ளிவைப்பதற்கு நான் காரணம் இல்லை. இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு இறுதி வரை உறுதுணையாக நின்றேன்.

 

இந்த படத்திற்காக காத்திருந்த ரசிகர்களை ஏமாற்றி விட்டானோ என்ற வருத்தம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் இந்த படத்தின் வெளியீடு குறித்து நான் அறிவிக்க போவதில்லை.இந்த படத்தை ரசிகர்கள் காணும் போது இந்த படம் கட்டாயம் உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக இருக்கும். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் இன்று வெளியாக உள்ள அனைத்து படங்களும் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்" என்று அவர் வேதனையாக தெரிவித்துள்ளார். 

தயாரிப்பாளர் பிரச்சனைக்கு பிறகு மலை போல் குவிந்துள்ள தமிழ் படங்களை வாரத்திற்கு மூன்று படங்கள் வீதம் வெளியிட்டு வருகின்றனர். இதன்படி இன்று விஷாலின் இரும்புத்திரை, கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தாவின் நடிகையர் திலகம், அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்கள் வெளியாக உள்ளது. இதில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படமும் வெளியாக இருந்த நிலையில் மீண்டும் தள்ளிபோகியுள்ளது. சில தயாரிப்பாளர் பிரச்சனைகள் மற்றும் டிக்கெட் வசூல் குறைவாக இருந்ததால் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைகளை தீர்த்து அடுத்த வாரத்தில் இந்த படத்தை வெளியிட உள்ளனர்.

 


கடைசி நேரத்தில் மீண்டும் தள்ளிப்போன பாஸ்கர் ஒரு ராஸ்கல்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்