பிக் பாஸ் ஜூலி-யை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் இயக்குனர்

       பதிவு : Nov 10, 2017 14:45 IST    
பிக் பாஸ் ஜூலி-யை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் இயக்குனர்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அறிமுகமான ஜூலி, விஜய் டிவி-யில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பிரச்சனைகளை சமாளித்த ஜூலி தற்பொழுது சிறப்பு நிகழ்ச்சிகள், பள்ளி கல்லூரி விழாக்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வந்திருந்தார். 

மேலும் பிரபல தொலைகாட்சியான கலைஞர் டிவி-யில் தொகுப்பாளராக காலா மாஸ்டர் மூலம்  அறிமுகமகிருப்பதாக தகவல்கள் வந்திருந்தது. இந்நிலையில் பிரபல விளம்பர பட இயக்குனரான பாபா பகுர்தீன் என்பவரின் மால் ஒன்றில் விளம்பரத்தில் நடித்துள்ளார். 

 

இதனை தொடர்ந்து பாபா பகுர்தீன் இயக்கத்திலையே மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஜூலி கதாநாயகிக்கு இணையான முக்கியத்துவம் உள்ள கதாபத்திரத்தில் நடிக்க உள்ளாதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஓவியாவுக்கு அடித்த படியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஜூலி பிரபலமாகியிருக்கிறார். இதன் மூலம் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் ஜூலிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

 


பிக் பாஸ் ஜூலி-யை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் இயக்குனர்


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்