தளபதி 62வில் இணையும் பிக் பாஸ் பிரபலம்

       பதிவு : Feb 12, 2018 16:37 IST    
bigg boss julie joins thalapathy 62 bigg boss julie joins thalapathy 62

ஏஆர். முருகதாஸ் - விஜய் கூட்டணியில் தற்பொழுது உருவாகி வரும் படம் 'தளபதி 62'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பகுதியில் துவங்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் முதல் கட்டத்தை முடிவடைந்து சண்டை காட்சிகளுக்காக கொல்கத்தாவில் பிரமாண்ட செட் அமைத்து அதிரடி காட்சிகளை படமாக்கப்பட்டு வருகின்றனர். ஒரு பக்கம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையிலும் படத்தினை பற்றிய சில தகவல்களை படக்குழு அவ்வப்போது  வெளியிட்ட நிலையில் உள்ளது.  

'பைரவா' படத்தினை தொடந்து கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய வேடத்தில் 'பிக் பாஸ்' ஜூலி இணைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இவர் சல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு அதிகளவு மக்கள் மனதினை சிறைபிடித்திருந்தார். இதன் பின்னர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரபல டிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வளம் வருவதோடு விளம்பரங்களிலும் பங்கேற்று வருகிறார். மேலும் விமலின் 'மன்னர் வகையறா' படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். தற்பொழுது 'உத்தமி' என்ற  படத்தில் நாயகியாகவும் நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படியாக 'தளபதி 62' படத்தில் இணைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 


தளபதி 62வில் இணையும் பிக் பாஸ் பிரபலம்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்