விஜய்யின் 62வது படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

       பதிவு : Jan 31, 2018 18:33 IST    
thalapathy 62 shooting updates thalapathy 62 shooting updates

விஜய் தனது 62வது படத்தினை இயக்குனர் ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த 19ம் தேதி சிறப்பு பூஜை நடைபெற்று படப்பிடிப்பும் துவங்கப்பட்டது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை பாடல் காட்சியில் இருந்து படக்குழு ஆரமித்துள்ளது. இந்த பாடல் காட்சிகளை சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் முட்டுக்காடு பகுதியில் படகுத்துறை ஒன்று இருக்கிறது. இந்த பகுதி வழியாக செல்லும் ஆறு நேரடியாக கடலில் கலக்கும் இயற்கையான பல காட்சிகள் அந்த பகுதியில் இடம் பெற்றிருப்பதாக படக்குழு தெவித்துள்ளது. அந்த பகுதியில் கடல் நீரும் நதி நீரும் கலக்கும் இடத்தினை தேர்வு செய்து பிரமாண்டமான முறையில் பாடல் காட்சிகளை படமாக்கப்பட்டிருக்கிறதாம். இந்த பகுதியில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகள் ரசிகர்கர்களை கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்பொழுது விஜய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை முடிவடைந்ததை அடுத்து படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பை கொல்கத்தா நகரில் எடுக்க உள்ளனர். இந்த படப்பிடிப்பில் விஜய்யின் பல அதிரடி காட்சிகள் இடம் பெறுவதாக தகவல் வந்துள்ளது. 20 நாட்களில் எடுக்கவிருக்கும் ஷூட்டிங்கில் அதிரடி காட்சிகளை தொடர்ந்து விஜய்யின் மாஸ் வசனங்களும் இடம் பெற உள்ளதாம். மேலும் இவர்களது கூட்டணியில் உருவான 'கத்தி' படத்தின் அதிரடி சண்டை காட்சிகளும் கொல்கத்தாவில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று கொல்கத்தாவில் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த பகுதியில் எடுக்கப்பட்ட இயற்கை சார்ந்த சில புகைப்படத்தை படக்குழு வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.  

 


 


விஜய்யின் 62வது படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்