ads

விஜய்யின் 62வது படத்தின் அறிமுக பாடலின் தகவல்

vijay 62 opening dance updates

vijay 62 opening dance updates

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த 'மெர்சல்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த படம் தெலுங்கில் 'அதிர்ந்தி' என்ற தலைப்பில் வெளிவந்தது. இலவச மருத்துவத்திற்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் பேசப்பட்ட விஜய்யின் வசனம் விமர்சம் ரீதியாகவும், சில அரசியல் சார்ந்தவர்கள் மத்தியிலும் அதிகளவு எதிர்ப்புகள் படத்தின் மீது ஏற்பட்டது. இந்த எதிர்ப்பின் காரணத்தினால் தெலுங்கு திரையுலகில் தீபாவளிக்கு வெளிவர இருந்த இப்படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டு சில நாட்களுக்கு பிறகு வெளியிடப்பட்டது. மேலும் இப்படத்தில் விஜய் ஜோசப் என்ற பெயர் வைத்ததிற்கும் சில வதந்திகள் பரவியது. இந்த படத்திற்கு எதிர்ப்புகள், வதந்திகள் போன்றவை பரவியும் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியாகவும் வெகுவான வரவேற்பு கிடைத்திருந்தது.  

இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 62வது படத்தினை உருவாக்கவுள்ளார். இதற்கு முன்னதாக இவர்களது கூட்டணி கத்தி, துப்பாக்கி படத்தில் இணைந்திருந்தது. இந்த படம் விவசாயத்திற்கு ஏற்படும் தண்ணீர் பிரச்சனை, இராணுவ அதிகாரியின் விசித்திர சிந்தனை போன்றவையை அடிப்படையாக கொண்டு உருவானது. தற்பொழுது இயக்கவிருக்கும் விஜய்யின் 62வது படத்திலும் விவசாயத்திற்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய் இரு வேடத்தில் நடிக்கவுள்ளார். இவருக்கும் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். இவர்களுடன் இணைந்து 'இசை புயல்' ஏஆர்.ரகுமான் இசையமைக்கும் பணியிலும், கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணியிலும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியிலும் இணைந்துள்ளனர். தற்பொழுது வந்த தகவலில் வசன எழுத்தாளராக ஜெயமோகன் ஒப்பந்தமாகியுள்ளார்.                

இந்நிலையில் 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இப்படத்தின் அறிமுக பாடலுக்கான இசையமைக்கும் பணியை ஏஆர்.ரகுமான் முன்னதாகவே முடித்து விட்டதாகவும் இந்த பாடலுக்கு நடன இயக்குனர் ஷோபி நடனமாடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. தற்பொழுது விஜய்யின் அறிமுக பாடலுக்கு நடனமாடும் காட்சிகளை   படமாக்கப்பட்டு வருகின்றனராம். 

      

விஜய்யின் 62வது படத்தின் அறிமுக பாடலின் தகவல்