ads

விஜய்யின் க்ளாப் அடித்த புகைப்படம் வைரல்

vijay 62 shooting still viral

vijay 62 shooting still viral

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 2017ல் தீபாவளி திருநாளில் ரசிகர்களை வியக்கும் வகையில் விஜய்யின் 61வது படமான 'மெர்சல்' படத்தினை பிரமாண்டமான முறையில் வெளியிட்டனர். இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து தனது 62வது படத்தினை ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கவுள்ளார். விஜய்யின் மெர்சல் படம் இலவச மருத்துவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. தற்பொழுது விஜய்யின் 62வது படம் விவசாயத்தை மையமாக கொண்டு உருவாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இதற்கு முன்பு இவர்களின் கூட்டணி பைரவா படத்தில் இணைந்திருந்தது. இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். மேலும் மெர்சல் வெற்றியை தொடந்து விஜய்யின் 62வது படத்திலும் இசை புயல் ஏஆர். ரகுமான் இணைந்துள்ளார். 

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பிற்காக சிறப்பு பூஜை இன்று நடைபெற்ற கையோடு படப்பிடிப்பையும் விஜய் க்ளாப் அடித்து துவக்கி வைத்தார். இதில் முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்படும் போதும் பூஜை நடைபெறும் போதும் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை நகரத்தில் 30நாட்கள் மற்றும் இதனை தொடர்ந்து கொல்கத்தா பகுதியில் மற்ற படப்பிடிப்புகள் எடுக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் விஜய் க்ளாப் அடித்து துவக்கி வைத்த புகைப்படத்தை ரசிகர்கள் போஸ்டர், பேனர் போன்றவை அடித்து வலைத்தளத்தில்  வைரலாகி வருகின்றனர்.              

      

thalapathy 62 shootingthalapathy 62 shooting
vijay 62 shooting stillvijay 62 shooting still

விஜய்யின் க்ளாப் அடித்த புகைப்படம் வைரல்