விஜய்யின் 62வது படத்திற்கு சிறப்பு பூஜை

       பதிவு : Jan 19, 2018 10:56 IST    
vijay 62 pooja start today vijay 62 pooja start today

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 2017ல் தீபாவளி திருநாளில் ரசிகர்களை வியக்கும் வகையில் விஜய்யின் 61வது படமான 'மெர்சல்' படத்தினை பிரமாண்டமான முறையில் வெளியிட்டனர். இந்த படத்தில் விஜய் மூன்று கெட்டப்பில் முதல் முறையாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். மேலும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்தியா மேனன், காஜல் அகர்வால் இணைத்திருந்தனர். இந்த படம் தெலுங்கில் 'அதிர்ந்தி' என்ற தலைப்பில் வெளிவந்தது. தமிழ் திரையுலகம் முதல் தெலுங்கு திரையுலம் வரை படத்திற்கு ஆரவாரத்தோடு வரவேற்பு கிடைத்திருந்தது. பிரபல தேனாண்டாள் பிலிஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ராமசாமி தயாரித்துள்ள இப்படத்தில் ஏஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.            

இந்த வெற்றி படத்தினை தொடந்து விஜய் தனது 62வது படத்தினை ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யின் 61வது படமான மெர்சல் படத்தினை இலவச மருத்துவத்தை மையமாக கொண்டு உருவானதை தொடந்து விஜய்யின் 62வது படம் விவசாயத்தை மையமாக கொண்டு உருவாக உள்ளது. இந்த படத்திலும் 'இசை புயல்' ஏஆர். ரகுமான் இசையமைக்கும் பணியில் இணைந்துள்ளார். மேலும் விஜய்க்கு ஜோடியாக 'பைரவா' படத்தினை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக இணையவுள்ளார். இதனை தொடர்ந்து பெயரிட படாத விஜய்யின் 62வது படத்தின் படப்பிடிப்பிற்காக சிறப்பு பூஜை இன்று பனையூரில் நடைபெற்றது. இதற்கு அடுத்தபடியாக முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை நகரத்தில் 30நாட்கள் மற்றும் இதனை தொடர்ந்து கொல்கத்தா பகுதியில் மற்ற படப்பிடிப்புகள் எடுக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது.           

 

இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் வெளிவந்த கத்தி, துப்பாக்கி படங்கள் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்ததினை தொடந்து தற்பொழுது எடுக்கவுள்ள விஜய்யின் 62வது படமும் தீபாவளிக்கு வெளியிடுவதாக தகவல் வந்திருந்தது. இந்த தகவலை உறுதி படுத்தும் விதமாக இயக்குனர் ஏஆர்.முருகதாஸ் அவரது ட்விட்டரில் ஹேப்பி தீபாவளி என்று பதிவு செய்துள்ளார்.   


விஜய்யின் 62வது படத்திற்கு சிறப்பு பூஜை


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்