ads

தீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஆக்சனில் களமிறங்கிய விக்ரம்

இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா படத்திற்கு பிறகு சீயான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா படத்திற்கு பிறகு சீயான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

விஜய் சந்தரின் 'ஸ்கெட்ச்' படத்திற்கு பிறகு சீயான் விக்ரம், இயக்குனர் ஹரி இயக்கத்தில் 'சாமி ஸ்கொயர்', இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் அருள், சாமி படங்களுக்கு பிறகு இயக்குனர் ஹரி, விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள 'சாமி ஸ்கொயர்' வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதியில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக கவுதம் மேனனின் கனவு படமான 'துருவ நட்சத்திரம்' படமும் டிசம்பர் 21ஆம் தேதில் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இந்த படங்களுக்கு பிறகு சீயான் விக்ரம் கமல் ஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இந்நிலையில் விக்ரம் தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் ஹச் வினோத்துடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று பல விருதுகளை குவித்த படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.

இதனால் இவருக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக அஜித், தனுஷ் ஆகியோரை இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சீயான் விக்ரமை வைத்து இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர இந்த படத்தின் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், இந்த படம் ஆக்சன் கலந்த அதிரடி படமாகவும் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

தீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஆக்சனில் களமிறங்கிய விக்ரம்