ads

கமல் ஹாசன் விக்ரம் கூட்டணியில் இணைந்த பிரபலம்

சீயான் விக்ரம் முதன் முறையாக கமல் ஹாசன் தயாரிக்க உள்ள புதுப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக கிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சீயான் விக்ரம் முதன் முறையாக கமல் ஹாசன் தயாரிக்க உள்ள புதுப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக கிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சீயான் விக்ரம் நடிப்பில், ஸ்கெட்ச் படத்திற்கு பிறகு துருவ நட்சத்திரம், சாமி ஸ்கொயர் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த இரண்டு படங்களின் ட்ரைலர் மற்றும் டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது. இந்த இரண்டு படத்தின் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்ததாக தனது புதுப்படத்திற்கு கமல் ஹாசனுடன் இணைந்துள்ளார்.

கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் கமல் மகள் அக்ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முதன் முறையாக கமல் ஹாசன், விக்ரம் இணைந்துள்ள கூட்டணியில் தற்போது இசையமைப்பாளர் கிப்ரான் இணைந்துள்ளார். ஏற்கனவே கமல் ஹாசனின் 'விஸ்வரூபம் 2' படத்திற்கு கிப்ரான் இசையமைத்துள்ள நிலையில் மீண்டும் கமல் ஹாசன் தயாரிக்க உள்ள புதுப்படத்தில் இணைந்துள்ளார்.

'தூங்காவனம்' படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் இசையமைப்பு பணிகள் துவங்கி விட்டதாகவும் கிப்ரான் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். சீயான் விக்ரம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் இதர நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக பிரமாண்ட சரித்திர படமான 'மகாவீர் கர்ணா' படத்தில் நடிக்க உள்ளார்.

கமல் ஹாசன் விக்ரம் கூட்டணியில் இணைந்த பிரபலம்